டெல்லி: தீபாவளி திருநாளான இன்று பட்டாசு வெடிப்பை அளவிலா ஆனந்த செயலாக செய்து வரும் இவ்வேளையில், நாம் அனைவரும் அறிய வேண்டிய மறுபக்கமாக காற்று மாசுபாடு இருந்து வருகிறது. இன்று அதிகாலை முதல் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகள் அடர்த்தியான புகை மூட்டத்தால் மூடப்பட்டு காணப்படுகிறது. காற்றின் தரம் மேலும் குறைந்து, காற்றுத் தரக் குறியீடு (AQI) மிக அபாயமான நிலையை எட்டியுள்ளது. இது பலரின் உடல்நலத்தை கவலைக்கிடமாக மாற்றக்கூடியதாகும்.
தீபாவளிக்கு முன்தைய நாளான நேற்று 'சோட்டி தீபாவளி' கொண்டாப்பட்டதை அடுத்து, டெல்லியின் 27 பகுதிகளில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்து, அபாயகரமான காற்று மாசு சூழலுக்குச் சென்றுள்ளது. அதாவது, தற்போது டெல்லியின் ஆனந்த் விஹாரில் காற்று தரக் குறியீடு அதிகபட்சமாக AQI 418-ஐ எட்டியதுடன், 11 பகுதிகளில் AQI 300க்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
#WATCH | Delhi: A layer of smog engulfs the Anand Vihar area of the National Capital.
— ANI (@ANI) October 31, 2024
The Air Quality Index of Anand Vihar is 418 in the 'Severe' category as per the CPCB. pic.twitter.com/zcGVBOarZx
டெல்லியில் காற்றின் தரம்:
- அலிபூர்: 326
- ஆனந்த் விஹார்: 420
- அசோக் விஹார்: 370
- IGI விமான நிலையம்: 303
- ஜஹாங்கிர்புரி: 391
- வஜிர்பூர்: 398
இதேபோல், காசியாபாத், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் மாசு அளவு அதிகரித்துள்ளது. காசியாபாத்தின் இந்திராபுரத்தில் 271 ஆகவும், நொய்டா 62 செக்டாரில் இருந்து 284 ஆகவும் அதிகரித்து பதிவாகியுள்ளது.
#WATCH | Air quality in 'Very Poor' category in the area near Akshardham temple, in Delhi pic.twitter.com/9fJ7nfutIQ
— ANI (@ANI) October 31, 2024
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும்: டெல்லியில் காற்றின் தரம் பல ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு AQI 220 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதாவது நேற்றைய தினத்தில் இருந்து AQI 307-ஐ எட்டியுள்ளது. இதுவே கடந்த 2020-ல் 296 ஆகவும், 2021-ல் 314 ஆகவும், 2022-ல் 259 AQI இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: '500 ஆண்டுகள் கழித்து வரும் வரலாற்று சிறப்புமிக்க தீபாவளி'- வாழ்த்துகள் பதிவிட்ட பிரதமர் மோடி!
பட்டாசு வெடித்ததால் உடல் பாதிப்புகள்: இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், "டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு சுவாசப் பிரச்னைகளுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், நீண்ட கால உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியது. அதிகரித்து வரும் மாசுபாடு பெரும்பாலான குழந்தைகள் மற்றும் முதியவர்களை தங்கள் வீடுகளில் அடைத்து வைத்துள்ளது.
#WATCH | Delhi: A local says, " there are several problems which we are facing due to pollution especially burning sensation in the eye...nothing is being done to tackle the issue of pollution...." https://t.co/K6Wmk7lCwA pic.twitter.com/atj6pXq0v9
— ANI (@ANI) October 31, 2024
பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை: இது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பட்டாசு வெடிப்பதற்குப் பதிலாக தீபங்களைக் கொளுத்துமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், பலர் தீபாவளியை பட்டாசு வெடிக்காமல் எப்படி தீபாவளி கொண்டாடப்படும் என எண்ணி பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்” என்றார்.
பட்டாசுக்கு ஜனவரி 1-ம் தேதி வரை தடை: முன்னதாக, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், பட்டாசு தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்