ETV Bharat / bharat

கெஜ்ரிவால் ஜாமீனுக்கு இடைக்கால தடை! கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காமல் போனது எப்படி? - Arvind Kejriwal Bail stay - ARVIND KEJRIWAL BAIL STAY

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துளது.

Etv Bharat
Delhi Chief Minister Arvind Kejriwal (ANI photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 6:59 PM IST

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள விசாரணை நீதிமன்றம் நேற்று (ஜூன்.20) மாலை தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்ற வழங்கிய ஜாமீனை நிறுத்தி வைத்தது. இதனிடையே வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

வழக்கு குறித்து வாதாட போதிய கால அவகாசத்தை விசாரணை நீதிமன்றம் வழங்கவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான எஸ்வி ராஜூ, டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஜாமீன் வழங்கும் தீர்ப்பை ஒத்திவைத்து கால அவகாசம் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவையும் விசாரணை நீதிமன்றம் நிராகரித்ததாக அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதையடுத்து வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கக் கோரி ஆரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ஜாமீன் கோரிய வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜூன்.21) விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் ஆம் ஆத்மி கட்சியினர் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறையின் விசாரணையை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள இடைக்கால ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போதிலும், உச்ச நீதிமன்றம் கடந்த மே 11ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தொடர்ந்து இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததை அடுத்து அதை நீடிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீனை நீடிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்றம் நேற்று (ஜூன்.20) தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்களவை தேர்தலில் தோல்வி எதிரொலி: மேற்கு வங்க காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி திடீர் முடிவு! - Adhir Ranjan Chowdhury

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.