ETV Bharat / bharat

சீனா விசா முறைகேடு வழக்கு: சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உத்தரவு! - Chinese Visa Scam karti chidambaram

சீன விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 1:09 PM IST

Etv Bharat
Congress leader Karti P Chidambaram (ANI Photo)

டெல்லி: கடந்த 2011ஆம் ஆண்டு வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது. ஆனால், அந்த பணிகள் முடிவதற்கு முன்னதாகவே சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களின் விசா முடிவடைந்தது.

இதையடுத்து அப்போது மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்த நிறுவனத்தினர், 263 ஊழியர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தருமாறு தெரிவித்ததாகவும் அதற்காக 50 லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐ கடந்த 2022ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக சிபிஐ அளித்த பரிந்துரையை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியது. ப.சிதம்பரம் வீட்டில் கடந்தாண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை கைது செய்தனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்திடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சிறப்பு நீதிபதி கவேரி பவேஜா வழக்கின் மீதான விசாரணையை நடத்தினார். வழக்கு தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட சம்மனை அடுத்து கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். அமல்லாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கை தொடர்பாக பதிலளிக்கக் கோரி கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, ஜாமீன் வழங்கினார்.

ஒரு லட்ச ரூபாய்க்கான தனிப்பட்ட பத்திரம் மற்றும் அதே தொகைக்கான ஒரு ஜாமீன் வழங்க உத்தரவிட்ட நீதிபதி கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள்! யார்.. யார் தெரியுமா? - PM Modi Oath Ceremony

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.