புதுடெல்லி: டெல்லியில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து 11வது நாளாக இன்று ‘மிக அதிக’ காற்று மாசுபாடு அளவு பதிவாகி, கடும்புகை மூட்டத்துடன் காணப்படுகிறது. இதுகுறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்டுள்ள தரவுப்படி டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 342 அடைந்துள்ளது. காற்றின் தரம் குறைந்திருக்கும் அதேசமயம் நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய மறுபக்கமாக யமுனை நதியின் நீரிலும் மாசுபாடு உள்ளது.
உயர் நீதிமன்ற தடை: இந்த நிலையின் தீவரத்தை உணர்ந்த டெல்லி உயர் நீதிமன்றம், யமுனை நதிகரையில் உள்ள நச்சு நுரைகள் நோய்வாய்ப்பட செய்யும் என்பதால் யமுனை நதிகரையில் சத் பூஜை செய்ய தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக நகரின் 1,000 இடங்களில் சத் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.
இதையும் படிங்க: மின்கட்டண குறைப்பு.. மதமாற்ற தடைச் சட்டம்.. மகாராஷ்டிரா தேர்தல் பாஜகவின் அதிரடி வாக்குறுதிகள்!
நச்சு நுரை நிறைந்த யமுனை நதி: ஆனால் அந்த அறிவிப்பையும் மீறி பலர் நச்சு நுரை நிறைந்த யமுனை நதியில் சத் பூஜை செய்து வரும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. ஒரு காலத்தில் டெல்லியில் பாய்ந்து ஓடி புனித நீர் நிலையாய் இருந்த யமுனை தற்போது நச்சுதன்மை நிரம்பிய வெள்ளை நுரைகளால் சூழப்பட்டு காட்சி அளிப்பது பார்ப்பவரை வேதனையில் ஆழ்த்தக் கூடி காட்சிகளாக உள்ளது.
டெல்லிக்குள் வந்துதான் மாசுபடுகிறது: கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் ‘யமுனை நதி இந்தியவின் நச்சு நிறைந்த நீர்நிலையாக’ உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கால்வாய்களால் அசுத்தும்: இதில் ஆச்சரியம் என்னவென்றால் யமுனை டெல்லியை நுழையும் போது சுத்தும் வாய்ந்ததாக உள்ளது. ஆனால் வெளியேறும் போது நச்சு தன்மை நிறைந்ததாக மாறுகிறது என கண்டறித்துள்ளனர். இதற்கு காரணம் யமுனை நதியுடன் பல கால்வாய்கள் இணைவதால்தான் என்கின்றனர். 22 கிலோ மீட்டர் உள்ள இந்த யமுனை நதிகரையில் ஒவ்வொரு 1.2 கிலோ மீட்டரிலும் கால்வாய்கள் இணைக்கப்படுகின்றன.
டெல்லியை கடக்கும்போது கடும் மாசு பாதிப்பு: இவ்வாறு டெல்லியின் பல்லா நகர் வழி நுழையும் யமுனை நதி நஜஃப்கர் வடிகால் இணைப்பு முதல் டிஎன்டி ஃப்ளைவே மற்றும் காளிந்தி குஞ்ச் பகுதியை அடையும் போது 30 மடங்கு மாசு அடைவதாக கூறப்படுகிறது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) யமுனா கண்காணிப்பு குழுவின் 2021 அறிக்கையின்படி, டெல்லியின் யமுனை நதியில் அதிக அளவு பாஸ்பேட் மற்றும் சர்பாக்டான்ட்கள் உள்ளது. அவை உருவாக காரணம் நதிகரையில் பலர் சட்டவிரோதமாக சலவை செய்வதால் என்கின்றனர்.
ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்: இந்த கால்வாய்கள் மற்றும் கழிவு நீர் இணைப்பு குறித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு கூறுகையில், “நகரின் 18 வடிகால்களும் 13 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் நஜாப்கர், ஷாஹ்தாரா மற்றும் பாரபுல்லா உள்ளிட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் மாசுபடுத்தும் வடிகால்கள் அதிக அளவிலான மாசுடன் நதியில் இணைகின்றன. இதனால் நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைக்கிறது. இதன் விளைவாக அந்த நீரில் உயிரினங்கள் உயிர் வாழ முடியாத சூழல் உருவாக அதிக வாய்ப்புள்ளது” என தெரித்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்