ETV Bharat / bharat

மார்ச் 10-ல் நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் - விவசாய சங்கம் அறிவிப்பு!

Delhi Farmer Protest: இந்தியா முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், டெல்லியை நோக்கிச் செல்லும் திட்டத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை எனவும் விவசாயச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

farmers-to-resume-delhi-chalo-protest-on-march-6-block-rail-tracks-on-march-10
இந்தியா முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் - விவசாயச் சங்கம் அறிவிப்பு..
author img

By PTI

Published : Mar 3, 2024, 9:17 PM IST

டெல்லி: விவசாயக் கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். ஆனால், விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லாதபடி, மாநில எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில எல்லைகளில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது.

இதனையடுத்து, விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையிலான எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த தடைகளை மீறி டெல்லிக்குச் செல்ல உள்ளே நுழைய விவசாயிகள் முயற்சித்தால், அவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மற்றும் காவல்துறையினரிடம் ஏற்பட்ட மோதலில், காவல் துறையினர் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில், விவசாயி ஒருவர் உயிரிழந்தார், பல விவசாயிகள் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில், விவசாயச் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், இன்று (மார்ச் 3) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, டெல்லியை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும், மேலும் விவசாயிகளின் பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் வரும் மார்ச் 6ஆம் தேதி பேருந்து, விமானம் மற்றும் ரயில் மூலமாக டெல்லிக்கு வருவார்கள் எனவும், அதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு, மார்ச் 10ஆம் தேதி நாடு முழுவதும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜேஇஇ மெயின் 2024 அமர்வு 2 விண்ணப்பம் செய்ய நாளை வரை காலக்கெடு நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.