டெல்லி : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஒருபுறம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை எதிர்கொண்டு காத்திருக்கிறது. மறுபுறம் பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாகி உள்ளன.
மேலும் பல்வேறு மாநிலங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தெரிகிறது.
இந்த நிலையில் மூட் ஆப் தி நேஷன் என்ற தலைப்பில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளன. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 28ஆம் தேதி வரை 35 ஆயிரத்து 801 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 38 இடங்களையும் பிறக் கட்சிகள் ஒரு இடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேசம் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 80
தேசிய ஜனநாயக கூட்டணி – 70 தொகுதிகள்
சமாஜ்வாதி கட்சி - 7 தொகுதிகள்
காங்கிரஸ் கட்சி – 1 இடம்
மகாராஷ்டிரா :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 48
தேசிய ஜனநாயக கூட்டணி – 22 தொகுதிகள்
இந்தியா கூட்டணி - 26 தொகுதிகள்
மேற்கு வங்கம் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 42
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி – 22 இடங்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி – 19 தொகுதிகள்
டெல்லி :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை - 7
தேசிய ஜனநாயக கூட்டணி – 7 இடம்
பீகார் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 40
தேசிய ஜனநாயக கூட்டணி -32 தொகுதிகள்
இந்தியா கூட்டணி - 8 இடங்கள்
ஜார்க்கண்ட் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 14
தேசிய ஜனநாயக கூட்டணி -12 இடங்கள்
இந்தியா கூட்டணி – 2 தொகுதிகள்
அசாம் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 14
தேசிய ஜனநாயக கூட்டணி – 12 தொகுதிகள்
இந்தியா கூட்டணி- 2 இடங்கள்
பஞ்சாப் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 13
தேசிய ஜனநாயக கூட்டணி - 2 இடங்கள்
ஆம் ஆத்மி - 5 இடங்கள்
காங்கிரஸ் - 5 தொகுதிகள்
அகாலிதளம் - 1 இடம்
அரியானா :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 10
தேசிய ஜனநாயக கூட்டணி – 8 தொகுதிகள்
இந்தியா கூட்டணி – 2 இடங்கள்
உத்தராகண்ட் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை - 5
தேசிய ஜனநாயக கூட்டணி – 5 தொகுதிகள்
காஷ்மீர் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை – 5
இந்தியா கூட்டணி – 3 தொகுதி
தேசிய ஜனநாயக கூட்டணி – 2 இடம்
இமாச்சல் பிரதேசம் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 04
தேசிய ஜனநாயக கூட்டணி - 4 தொகுதிகள்
கர்நாடகா :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை– 28
தேசிய ஜனநாயக கூட்டணி- 4 இடங்கள்
இந்தியா கூட்டணி - 24 தொகுதிகள்
ஆந்திர பிரதேசம் :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை – 25
தெலுங்கு தேசம் கட்சி- 17 தொகுதிகள்
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் – 8 இடம்
தெலங்கானா :
மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை- 17
இந்தியா கூட்டணி -10 இடங்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி- 3 இடம்
பி.ஆர்.எஸ்.,– 3 இடம்
ஏஐஎம்ஐஎம்- 1 இடம்
இதையும் படிங்க : மக்களவையில் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் - முக்கிய அம்சங்கள் என்னென்ன? முழு விபரம்!