ETV Bharat / bharat

பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம்! முக்கிய வலியுறுத்தல்கள் என்ன? - Congress National wide protest

CONGRESS NATIONAL WIDE PROTEST: ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம், வேலையில்லா திண்டாட்டம், வருமனாக் குறைவு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் தரப்பில் நாடு முழுவதும் வருகிற 22ஆம் தேதி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவுப்பு வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 10:34 PM IST

டெல்லி: காங்கிரஸ், பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக இது குறித்த ஆலோசனைக் கூட்டம் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் K.C.வேணுகோபால் கூறுகையில், "ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும், செபி தலைவர் மதாபி புச்சை நீக்க வேண்டும் என்றும், அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுதல், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியன குறித்தும் நாடு முழுவதும் தனி போராட்டம் நடத்தப்படும்" என அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் இந்த போராட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வருமானம் குறைவு, வினாத்தாள் கசிவு, பாஜகவின் பிளவு உள்ளிட்டவற்றைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இது குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத் கூறுகையில், “சாமானிய மக்களின் துயரங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையை அமைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அது குறித்து கவலைப்படுவதில்லை.

மேலும், சமீபத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானிக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் மீண்டும் கோரிக்கை விடுக்கும் என்ற அச்சத்தில், அவர்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டனர்" எனக் கூறினார்.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் தாரிக் அன்வர் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் என்டிஏ அரசை எதிர்க்கட்சிகள் முற்றுகையிட்டதாலும், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக மக்களை பிளவு படுத்த சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்து திருத்த மசோதாவை அரசாங்கம் திடீரென கொண்டு வந்தது.

ஆனால், ஒன்றிணைந்த எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை, இந்த இந்த சட்ட திருத்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல துணை போகாது. கடந்த ஆட்சியின் போது பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த போது செயல்பட்டது போல், அவர்களால் சட்டத்தை விரைவாக நிறைவேற்ற முடியவில்லை" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: செபிக்கு அடுத்த தலைவலி.. 'அதானி குறித்த விசாரணை என்னாச்சு?' உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.