ETV Bharat / bharat

நிதிஷ் குமாருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு - ஐதராபாத்தில் குவிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்! என்ன காரணம்?

பீகார் சட்டப்பேரவையில் வரும் 12ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெலங்கானாவிற்கு வந்து சேர்ந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 10:59 PM IST

பாட்னா : பீகாரில் ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையிலான கூட்டணியை முறித்துக் கொண்டு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, நிதிஷ்குமார், அன்று மாலையே பாஜவுடன் கூட்டணி அமைத்து புதிதாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவரது தலைமையில் அமைச்சரவை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியின் மீது பிப்ரவரி 12ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் முதலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நிதிஷ் குமார் தலைமையில் தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ளதால், பீகார் சட்டப்பேரவையில் நிதீஷ் குமார் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றால், பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நீடிக்கும். பீகார் சட்டப்பேரவையில் பிப்ரவரி 12ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

கட்சித் தாவல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்க பீகாரைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தெலங்கானாவில் குவிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சம்பய் சோரன் தலைமையிலான ஆட்சி மீதும் நாளை (பிப். 4) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி அம்மாநில காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் உறுப்பினர்கள் தெலங்கானாவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளதை முன்னிட்டு அவர்கள் மீண்டும் ஜார்கண்டு மாநிலத்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தற்போது பீகார் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஐதராபாத் அழைத்துவரப்பட்டு உள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : பூனம் பாண்டே செய்த பொய்ச் செய்தி மோசடி: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எச்சரிக்கை மணியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.