ETV Bharat / bharat

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்: அதிருப்தி வேட்பாளர்களை சரிக்கட்டும் காங்கிரஸ்!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் அதிருப்தி வேட்பாளர்களால் காங்கிரஸ் கட்சி திணறுகிறது. அதிருப்தி வேட்பாளர்களை வாபஸ் பெற செய்ய காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.

பிரதிநித்துவ படம்
பிரதிநித்துவ படம் (Image credits-Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 7:14 PM IST

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தியாளர்களும் களத்தில் இருப்பதால் அவர்களை வாபஸ் பெற செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் நவம்பர் 4ஆம் தேதியாகும்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்ரே) கட்சிகளை உள்ளடக்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 102 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்புக்கிடைக்காத சிலர் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சைகளாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கூட்டணிக் கட்சிக்கு போட்டியாக களமிறங்கிய நவாப் மாலிக்.. சூடுபிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம்!

ஏறக்குறைய 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைப்பதில் ஒவ்வொரு எம்எல்ஏவும் முக்கியம் என்பதால், வேட்புமனுவை வாபஸ்பெறும் கடைசி நாளிலாவது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து களத்தில் இருக்கும் வேட்பாளர்களை வாபஸ் பெற செய்ய காங்கிரஸ் மேலிடம் கடும் முயற்சி செய்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநில அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா,மகாராஷ்டிரா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் உள்ளிட்டோர் அதிருப்தியாளர்களிடம் பேசி வருகின்றனர்.

இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ரமேஷ் சென்னிதலா,"கட்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு மட்டுமே வேட்பு மனுத்தாக்கலுக்கான படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தன்னிச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை வெற்றி பெறச்செயும் வகையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும்,"என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.