ETV Bharat / bharat

"உங்களின் சொத்துக்கள் குழந்தைகளுக்கா.. இஸ்லாமியர்களுக்கா"- மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மீது காங்கிரஸ் புகார்! - Congress complaint against Anurag - CONGRESS COMPLAINT AGAINST ANURAG

தேர்தல் நடத்தை விதிகளை மீறி இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 2:06 PM IST

சிம்லா: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சல பிரதேசத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், உங்களது சொத்துகளை காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிவிடும் என்றார்.

ஹமிர்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், உங்களது குழந்தைகளின் சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது, காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் அது தெளிவாக காட்டப்பட்டு உள்ளது என்றார்.

உங்களது பிள்ளைகளின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு கொடுக்கவும், அணு ஆயுதங்களை கொண்டு நாட்டை அழிக்கவும், சாதிவெறி மற்றும் பிராந்தியவாதத்தால் நாட்டை பிளவுபடுத்தவும் அந்நிய சக்திகளின் காங்கிரஸ் கைகோர்த்து இருப்பது அதன் தேர்தல் அறிக்கையில் தெளிவாக தெரிகிறதாக தெரிவித்தார்.

காங்கிரசை சுற்றி சிறு சிறு கும்பல்கள் சூழந்து கொண்டு அதன் சித்தாந்தங்களை முற்றிலுமாக அபகரித்து கொண்டதாகவும், உங்களது குழந்தைகளுக்கு சேமித்த சொத்துகள் அவர்களிடமே போய் சேர வேண்டுமா அல்லது இஸ்லாமியரகளிடம் சேர வேண்டுமா என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

நாட்டில் இஸ்லாமியர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டதாகவும் ஆனால் மதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களது உரிமையின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக அனுராக் தாகூர் கூறினார். ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்ற போது தனது குழந்தைகளுக்கு சொத்துகளை சேர்த்து வைக்கும் எண்ணத்தில் 55 சதவீத பரம்பரி வரியை ஒழித்ததாகவும் தற்போது ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தைகளின்றி வாழ்வதால் உங்களது குழந்தைகளுக்காக சேர்த்து வைக்கும் சொத்துகளை அபகரிக்க முயல்வதாகவும் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அதை தங்களுக்கு உரியதாக மாற்றிக் கொள்கிறது காந்தி குடும்பம் என்று அனுராக் தாகூர் குறிப்பிட்டார். காங்கிரஸ் சொத்து மறுபகிர்வு என்ற பெயரில் மக்கள் தங்களது குழந்தைகளுக்காக சேர்த்து வைத்த சொத்துகளை அபகரித்து இஸ்லாமியர்களுக்கு வழங்கும், பெண்களின் மாங்கல்யத்தை கூட காங்கிரஸ் விட்டு வைக்காது என்ற பிரதமரின் கருத்தை முற்றிலுமாக மறுத்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கை குறித்து விரிவாக விளக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கோரினார்.

இதுகுறித்து பேசிய அனுராக் தாகூர், கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகளை தங்களது குழந்தைகளுக்கா அல்லது இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டுமா என மக்கள் முடிவெடுப்பார்கள் என்றார். கழிவறை, குடியிருப்பு, சமையல் எரிவாயு என இஸ்லாமியர்களுக்கு சமமான உரிமை வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அந்த உரிமைகள் மததின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என அனுராக் தாகூர் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இமாச்சல பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக காங்கிரஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : முன்னாள் பிரதமர் தேவுகடா பேரன் ஆபாச வீடியோ விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை - சித்தராமையா! - Deve Gowda Grandson Sex Scandal

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.