ஃபரிதாபாத்: ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் ரயில் நிலையம் அருகே இன்று காலை 9.30 மணியளவில் சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார், ஆர்பிஎஃப் படையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது, விபத்துக்குள்ளான ரயில் ஆக்ராவிலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு டெல்லிக்குச் சென்ற வழியில் விபத்துக்குள்ளாகியிருப்பது தெரிந்தது. பின்னர் தடம் புரண்ட ரயில் பெட்டிகளிலிருந்து நிலக்கரியை ஜேசிபி-யை கொண்டு அகற்றினர்.
மேலும், தடம் புரண்ட இரு பெட்டிகளையும் சரி செய்து சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இன்று மாலை வரையில் இந்த பணிகள் நீடித்தது. குறிப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்த ரயில்வே நிர்வாகம் உள்ளூர் ரயில்களின் இயக்கம் இதனால் தடைப்பட்டதாகக் கூறியது.
சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதனால் வல்சாத்-பாந்த்ரா டெர்மினஸ் விரைவு ரயில், 09186 கான்பூர்-மும்பை சென்ட்ரல் விரைவு ரயில், 09056 உத்னா-பாந்த்ரா டெர்மினஸ் விரைவு ரயில், 19426 நந்துர்பார் - போரிவலி விரைவு ரயில் மற்றும் 19102 சூரத்-விரார் விரைவு ரயில் ஆகியவை ஆங்காங்கே சிறிது நேரத்துக்கு நிறுத்தப்பட்டன.
இதையும் படிங்க: உரிமை கோரிய நரேந்திர மோடி.. ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த திரெளபதி முர்மு!