புவனேசுவரம்: டானா புயல் இன்று (அக்.25) அதிகாலை கரையைக் கடந்தது. வடமேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த புயல் வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் நகர்ந்து, ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே கரையைக் கடந்தது.
முன்னெச்சரிக்கையாக, கேந்திரபாரா, பத்ரக், பாலசோர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு, 8,332 நிவாரண முகாம்களில் தங்க வைப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
THE SEVERE CYCLONIC STORM “DANA” (PRONOUNCED AS DANA) MOVED NORTH-NORTHWESTWARDS WITH A SPEED OF 10 KMPH AND LAY CENTRED AT 0730 HRS IST OF TODAY, THE 25TH OCTOBER, OVER NORTH COASTAL ODISHA NEAR LATITUDE 21.10° N AND LONGITUDE 86.80°E, ABOUT 30 KM NORTH-NORTHWEST OF DHAMARA AND…
— India Meteorological Department (@Indiametdept) October 25, 2024
மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 4,431 கர்ப்பிணிகளில் 1,600 பெண்கள் குழந்தை பெற்றுள்ளதாக முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். மேலும், 56 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மழைப்பொழிவு: பாலசோர், மயூர்பஞ்ச், பத்ரக் மற்றும் கேந்த்ராபாரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், சில பகுதிகளில் 21 செ.மீ-க்கு மேல் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில், விமான சேவைகள் பாதிப்பு: டானா புயல் எதிரொலியாக, சுமாா் 400 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக புவனேசுவரம் விமான நிலையத்தில் நேற்று (அக்.24) மாலை 5 மணி முதல் வெள்ளிக்கிழமை இன்று (அக்.25)காலை 9 மணி வரை 16 மணி நேரத்துக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதேபோல், கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 9 மணி வரையிலான 15 மணி நேரத்துக்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்