ETV Bharat / bharat

அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்த சீனா - மத்திய அரசு கண்டனம்! - China Change Arunachal places name - CHINA CHANGE ARUNACHAL PLACES NAME

அருணாசல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்து சீன சிவில் விவகாரத் துறை நான்காவது பட்டியலை வெளியிட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 7:39 PM IST

பீஜிங் : இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்து பட்டியலை வெளியிட்டு உள்ளது. சீன சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை ஏற்கனவே மறுப்பெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்டது.

2017ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலையும், 2021 ஆம் ஆண்டு 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலையும், 2023 ஆம் அண்டு 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலையும் சீனா வெளியிட்டது.

தற்போது நான்காவது பட்டியலை சீன சிவில் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா - சீனா எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது. சீனாவால் மறுபெயரிடப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்துக்கு சொந்தமான இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப் பாதை உள்ளது.

இவற்றின் பெயர்களை சீன மொழியான மாண்டரின் மொழியிலும், அதேபோல் திபெத்திய மொழியிலும் மாற்றி சீன அரசு அறிவித்து உள்ளது. மேலும், அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை அரசிதழிலும் சீனா வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் நடவடிக்கைக்கு பலமுறை இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை இந்தியா நிராகரித்து வருகிறது. இது குறித்து பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நகைப்புக்குரியது என்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் இயற்கையான மற்றும் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தெரிவித்தார். இதனிடையே அருணாசல பிரதேசத்தை சீன தனது தேசிய மொழியில் ஷங்கனன் என்று அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கச்சத்தீவு விவகாரம் -"ஜெய்சங்கர் திடீர் பல்டி அடிப்பது ஏன்? மோடி ஆட்சியில் மீனவர்கள் கைது இல்லையா?"- ப சிதம்பரம் கேள்வி! - P Chidambaram On Katchatheevu Issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.