ETV Bharat / bharat

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு! - chandrababu naidu oath taking - CHANDRABABU NAIDU OATH TAKING

ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

ETV Bharat
ETV Bharat (Photo Courtesy - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 11:41 AM IST

Updated : Jun 12, 2024, 4:12 PM IST

விஜயவாடா: நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திர பாபு நாயுடு அபாரமான வெற்றி பெற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கெசரப்பள்ளளி எனுமிடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

4 வது முறையாக மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவை, ஆரத்தழுவி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து நர லோகேஷ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்று வருகின்றனர். மொத்தமாக 23 அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவையில் 3 இடங்கள் ஜனசேனாவுக்கும் 1 இடம் கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 164 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற அவை தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கூட்டணி கட்சி ஆதரவுக் கடிதங்களுடன் ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்த சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யான் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க ஆளுநர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, விஜயவாடா விமான நிலையம் அருகே கெசரப்பள்ளி எனும் இடத்தில் உள்ள ஐடி பார்க்கில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் பதவி ஏற்பு விழா வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி நட்டா, நிதின் கட்கரி, ராம்மோகன் நாயுடு, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் உள்ள 24 பேரில் 3 பேர் பெண்கள், புதிய முகங்கள் 17 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜூன் 24-ல் தொடங்குகிறது 18-ஆவது மக்களவை கூட்டத்தொடர்! - 18th Lok Sabha First session

Last Updated : Jun 12, 2024, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.