டெல்லி: நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த 9-ஆம் தேதி பதவியேற்றார். நேற்று மாலை டெல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்களுக்கான இலாகா பட்டியல் வெளியிடப்பட்டன. அதன்படி நிதியமைச்சர் பொறுப்பு மீண்டும் நிர்மலா சீதாராமன் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மாநிலங்களுக்கான ஜூன் மாதத்திற்கான வரிப் பகிர்வு நிதியாக ரூ.1.39 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. அதில், அசாம் மாநிலத்திற்கு ரூ.4,371 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.5,655 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.5,096 கோடியும், தமிழகத்திற்கு வரிப்பு பகிர்வு நிதியாக ரூ.5,700 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பீகார் மாநிலத்திற்கு ரூ.14,056 கோடியும் , மத்திய பிரதேசத்திற்கு ரூ.10,970 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.10.513 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.8,828 கோடியும், மணிப்பூர் மாநிலத்திற்கு ரூ.1000 கோடியும், அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.25,069 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.1.42 லட்சம் கோடி வரி பகிர்வு நிதியை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நரேந்திர மோடி 3.0: மத்திய அமைச்சர்களின் இலாகா பட்டியல்!