ETV Bharat / bharat

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாள் இந்தியா வருகை! திடீர் சுற்றுப்பயணத்திற்கு என்ன காரணம்? - Bangladesh PM India visit

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 7:27 PM IST

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

Etv Bharat
MoS Kirtivardhan Singh Welcomed Bangladesh PM Sheikh Hasina at the Airport (Photo: ANI)

டெல்லி: 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றும் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஜூன் 9ஆம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவிற்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வருகை தந்தார்.

தற்போது இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (ஜூன்.21) மீண்டும் டெல்லி வந்துள்ளார். வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் உள்ளிட்டோர் டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று அவரை வரவேற்றனர். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு அரசுப் பயணம் இதுவாகும்.

இன்று மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து நாளை (ஜூன்.22) காலை ஷேக் ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா - வங்கதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்பின் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் ஷேக் ஹசீனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து நாளை மாலை தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் வங்கதேசம் திரும்புகிறார்.

இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையை அடுத்து, இரு தரப்பிலும் பல துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் சந்தித்துக் கொள்வது இத்துடன் 10வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கெஜ்ரிவால் ஜாமீனுக்கு இடைக்கால தடை! கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காமல் போனது எப்படி? - Arvind Kejriwal Bail stay

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.