ETV Bharat / bharat

பரபரப்பு ஆடியோ.. கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் புதிய திருப்பம்.. அம்பலமான மருத்துவமனை அலட்சியம்! - kolkata doctor case audio

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 2:25 PM IST

kolkata doctor case latest update: கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை கொலை வழக்கில் மருத்துவமனை நிர்வாகத்தின் செல்போன் உரையாடல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை அதிகாரி இந்திரா முகோபாத்யாய்
காவல்துறை அதிகாரி இந்திரா முகோபாத்யாய் (credit - ETV Bharat)

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது இந்த வழங்கி சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கில் கைதான சஞ்சய் ராய், மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், சம்பவம் நடந்த இரவில் பணியில் இருந்த மருத்துவர்கள் நான்கு பேர் மற்றும் ஒரு தன்னார்வலர் என ஏழு பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று கொல்கத்தா காவல்துறை தரப்பில் பதிவான தகவல்களில் பல்வேறு முரண்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.

ஆனால், திடீர் திருப்பமாக காவல்துறை தரப்பில் மருத்துவமனையின் மீது குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை மருத்துவர் கொலை குறித்து போலீசுக்கு தகவல் கொடுப்பதற்கு முன்னர், மருத்துவமனை நிர்வாகம் பெண் மருத்துவரின் பெற்றோரை தொடர்புகொண்டு தவறான தகவல்களை அளித்துள்ளதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

அதாவது, சம்பவத்தன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று மருத்துவமனை நிர்வாகம்தான் முதன்முதலில் அவரது பெற்றோருக்கு போன் செய்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செல்போன் உரையாடலை வெளியிட்டுள்ள காவல்துறை இதனை உறுதி படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கொல்கத்தா துணை ஆணையர் இந்திரா முகோபாத்யாய், காவல்துறை எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை தொடர்புகொண்டு பேசவில்லை.

பெண் மருத்துவர் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகமே அவரது பெற்றோருக்கு மூன்று முறை தொடர்பு கொண்டுள்ளது. முதல் அழைப்பில், தங்கள் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு கேட்டுள்ளனர். இரண்டாவது அழைப்பில், அவர்களது மகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மூன்றாவது அழைப்பில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பெண் மருத்துவர் நீல நிற உடையில் சடலமாக இருந்ததை தான் நாங்கள் பார்த்தோம். ஆனால், மூன்று மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு மகளின் சடலத்தை காண பெற்றோருக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அப்போது, சடலத்தில் வேறொரு நிறத்தில் மேலாடை இருந்ததாக கூறுகின்றனர். இருப்பினும், க்ரைம் சீனில் இருந்து சிகப்பு நிற போர்வையை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். ஆனால், அந்த நிற போர்வை நிச்சயமாக க்ரைம் சீனில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு; முக்கிய கைதியிடம் உண்மைக் கண்டறியும் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.