டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசியத் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால், கடந்த சனிக்கிழமை அன்று, இன்னும் இரண்டு நாட்களில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
#WATCH | After Atishi was elected as the leader of AAP legislative party and the new CM of Delhi, Delhi minister Gopal Rai said, " today, delhi aap legislative party meeting was called. in the meeting, atishi was unanimously given the responsibilities of the cm until next delhi… pic.twitter.com/TX9xZBKxKm
— ANI (@ANI) September 17, 2024
அதேநேரம், டெல்லி மக்கள் தன்னை நேர்மையானவர் என சான்றிதழ் வழங்கும் வரை தான் முதல்வராகப் பதவி ஏற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிஷி பெயரை முதல்வர் தேர்வுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார்.
இதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம், அதிஷிக்கு ஆம் ஆத்மி சட்டமன்றக் குழு தலைவராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிஷி டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்கிறார்.
இதையும் படிங்க: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு;அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு!
டெல்லியின் அடுத்த முதல்வர் அதிஷி #DelhiCM #ArvindKejriwal #ChiefministerofDelhi #CMofDelhi #AtishiMarlena #Atishi #AAPDelhi #ETVBharatTamil pic.twitter.com/dmsn34Q1mU
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 17, 2024
முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மறுத்தார். மேலும், யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டாலும், அவர்களுக்கு அனைத்து உறுப்பினர்களும் முழு ஆதரவு வழங்குவர் என ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் கோபால் ராய் தெரிவித்திருந்தார்.
மேலும், டெல்லிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்த ஆண்டுக்குள்ளாகவே டெல்லி சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அன்றே வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.