ஐதராபாத் : 2024 மக்களவை தேர்தல் மற்றும் அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். 60 தொகுதிகளை கொண்ட அருணாசல பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
மார்ச் 20ஆம் தேதி அருணாசல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் ஏப்ரல் 19ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
அதேபோல், 32 இடங்களை கொண்ட சிக்கிம் மாநிலத்திற்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டப் பேரவை தேர்தலுக்கான அறிவிப்புகள் மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : 7 கட்டங்களாக நடக்கிறது நாடாளுமன்ற தேர்தல்.. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எப்போது?