கவுகாத்தி: அசாம் - மேகாலயா கேடர் பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஷிலாதித்யா சேத்தியா, 2009ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்தவர். அசாம் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக அவர் பணியாற்றினார். தொடர்ந்து அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி புற்றுநோய் காரணமாக நீண்ட நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூன்.18) அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையின் ஐசியூவில் இருந்த தனது மனைவியின் உடலை பார்த்த சிறிது நேரத்தில் ஷிலாதித்யா சேத்தியாவும் தற்கொலை செய்து கொண்டார்.
ஷிலாதித்யா சேத்தியாவின் மரணம் அசாம் உள்துறையை உலுக்கியது. மனைவி இறந்த சிறிது நேரத்தில் துக்கம் தாங்காமல் ஷிலாதித்யா சேத்தியாவும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிலாதித்யா சேத்தியாவின் உடலை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு: பவானி ரேவண்ணாவுக்கு முன் ஜாமீன்- நீதிமன்றம்! - Bhavani Revanna