ETV Bharat / bharat

திருப்பதியில் ஆர்ஜிதா சேவாக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங்.. ஏழுமலையானை அருகே தரிசிக்க விண்ணப்பிப்பது எப்படி? - TTD Online Ticket Booking

TTD Dharsan: திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்புத் தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் குறித்த விபரங்களைத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 7:44 PM IST

திருப்பதி: உலக புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்புத் தரிசனத்திற்கு முன்பதிவு குறித்த அறிவிப்பைத் திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த கோயிலுக்கு நாட்டின் அனைத்து மாநிலங்கள் மட்டுமில்லாது வெளிநாட்டில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காகப் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து கொள்வது வாடிக்கையாகும். அதன்படி, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சென்று சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யத் தொடங்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பதி தேவஸ்தான் வெளியிட்டுள்ள தகவலில், 'மே 18ஆம் தேதி காலை 10.00 மணியளவில் ஸ்ரீவாரி ஆகஸ்ட் மாதத்தின் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இச்சேவைக்கான டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கல் முறையில் பெற மே 20 ஆம் தேதி காலை 10.00 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஆன்லைனில் டிக்கெட்டுகளைப் பெற மே 20 முதல் 22 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்குள் பணம் செலுத்தினால் மின்னணு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடக்க உள்ள திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் எஸ்டி சேவா உள்ளிட்ட வருடாந்திர பவித்ரோத்ஸவம் சேவைகள் உள்ளிட்டவற்றுக்கும் இம்மாதம் மே 21ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடி தரிசனத்துக்கான டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மே 23ஆம் தேதி காலை 10.00 மணி முதல் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், தரிசனம் மற்றும் தங்குவதற்கு விரும்பும் ஸ்ரீவாணி அறக்கட்டளையைச் சேர்ந்த நன்கொடையாளர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இதே மே 23ஆம் தேதி மாலை 3.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுபோல, மே 24ஆம் தேதி மாலை 3.00 மணி முதல் திருப்பதியில் தங்கும் விடுதிக்காக விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, மே 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆகஸ்ட் மாத சிறப்பு நுழைவு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் எனவும், இம்மாதத்திற்கான தங்கும் விடுதிகளுக்கான ஒதுக்கீடு டிக்கெட்களை மே 24 ஆம் தேதி மாலை 3 மணிவரை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மே 27 ஆம் தேதி காலை 11 மணிக்குத் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி சேவாவும், மதியம் 12 மணிக்கு நவநீத சேவாவும், 1 மணிக்கு பரகாமணி சேவா உள்ளிட்டவை நடக்க உள்ள விபரங்கள் குறித்து ஆன்லைனில் வெளியிடப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவாரி சேவை என்றால் என்ன?: இது திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்குத் தன்னலமின்றி சேவையாற்றும் விதத்தில் 2001, நவம்பர் 1 முதல் “ஸ்ரீவாரி சேவா” என்ற பெயரில் தொடங்கப்பட்ட தன்னார்வலர்கள் சேவையாகும். இதுவரை கடந்த 12 ஆண்டுகளில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள் இதில் சேவையாற்றியுள்ளதாகத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு! - Bail To Arvind Kejriwal

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.