ETV Bharat / bharat

எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை.. அண்ணாமலை விளக்கம்!

Annamalai K about Amit Shah speech: பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று, யார் வந்தாலும் கதவுகள் திறந்திருக்கும் அதைத்தான் அமித்ஷா தெரிவித்தார் என்றும், குறிப்பிட்டு எந்த கட்சி பெயரையும் சொல்லவில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Annamalai Press Meet
அண்ணாமலை பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 4:42 PM IST

டெல்லி: திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பாஜகவில் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்று, ஏராளமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை கட்சியில் இணைத்துள்ளனர். மொத்தமாக 15 முன்னாள் எம்எல்ஏ மற்றும் 1 முன்னாள் எம்பி என 16 பேர், மூத்த தலைவர்களான அரவிந்த் மேனன், பொங்குலேட்டி சுதாகர், ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இவர்கள் அனைவருமே வேறு வேறு காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளனர். தற்போது இந்தியா எந்த திசையில் செல்கிறது, இந்தியா எந்த வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது என்பதை முழுமையாக பார்த்தவர்கள். இனி 2024-இல் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்தில் நம் தலைமை அலுவலகத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

நேற்று (பிப்.6) தனியார் செய்தித்தாள் ஒன்று அமைச்சர் அமித்ஷாவிடம், ஒரு கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் வருவார்களா, ஏற்றுக் கொள்வீர்களா என கேள்வி கேட்டப்பட்டது. அமித்ஷாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று, யார் என்டிஏவுக்கு வந்தாலும், எங்களுடைய கதவுகள் திறந்திருக்கும் என்பதுதான். அதைத்தான் அவர் தெரிவித்தார். அவர் குறிப்பிட்டு எந்த கட்சிப் பெயரையும் சொல்லவில்லை.

நீங்கள் அந்த கட்சிப் பெயரை மென்சன் பன்னியிருந்தாலும் சரி, இல்லை வேறு கட்சிப் பெயரைக் குறிப்பிட்டிருந்தாலும் சரி, அமித்ஷா பதிலைப் பொறுத்தவரை, யார் பிரதமரின் கரத்தை வலுப்படுத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருகிறார்களோ, அவர்களுக்காக பாஜகவின் கதவுகள் திறந்திருக்கும் என்றிருப்பார். இதைத்தான் நாங்களும் சொல்கின்றோம், இதில் தெளிவாக உள்ளோம். ஆனால், இதை ஏற்றுக் கொண்டு வர வேண்டும். அதற்கு பின்னால் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை.

அது அவரவர் முடிவு. ஒரு தலைவர் இதைப் பார்த்து ரியாக்ட் பன்றாங்க, அதைப் பார்த்து இன்னொரு தலைவர் ரியாக்ட் பன்றாங்க, இது குத்துமதிப்பாக அமித்ஷாவைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு எல்லோருக்கும் திறந்திருக்கு என்றார். ஏன், திமுக கூட்டணியில் இருந்து நாளை யாரும் வரமாட்டாங்கன்னு என்ன இருக்கு? கதவு எல்லோருக்கும் திறந்திருக்கும், ஆனால் அடிப்படை பிரதமர் மோடியை ஏற்றுக் கொண்டு வர வேண்டும்.

திமுகவும், நாங்களும் இரு துருவங்களாக இருக்கின்றோம். அவர்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் வரப்போவதும் இல்லை. மற்றபடி, நம்முடைய தேசிய ஜனநாயக கட்சிக்கு யாரிடமும் சென்று நீங்கள் வாங்க எனவில்லை, அந்தந்த கட்சிகள் அந்தந்த காலகட்டதில், அந்த கட்சிக்கு எது நல்லது என்பதையும் பார்க்கின்றனர். குறிப்பாக தனிப்பட்ட வளர்ச்சிக்கு, 2024 பாராளுமன்றத் தேர்தலைப் பார்க்கிறார்கள்.

மற்றபடி, இந்த கூட்டணி எப்படி இருக்கும், எந்த தலைவர்கள் இருப்பார்கள், எந்த கட்சி இருக்கும் என அதனை வருகின்ற கால சூல்நிலையில் கூறுகின்றோம். தற்போது பிப்ரவரி முதல் வாரத்தில் உள்ளோம், நேரம் காலம் இருக்கு. நாங்கள் கூறுவது பிரதமரின் தலைமையை ஏற்றுக் கொண்டு வர வேண்டும். இதுதான் அடிப்படை, இதில் யாரையும் யாரும் வற்புறுத்தப் போவதில்லை. எத்தனையோ கட்சிகள் பேசிக் கொண்டுள்ளனர். நேரமும், காலமும் வரும்போது பார்ப்பீர்கள்.

பாஜகவை பொறுத்தவரை என்டிஏவை உருவாக்கியவர்கள் நாங்கள். இதில் பல காலகட்டத்தில் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள், கட்சிகள் இருந்திருக்கிறது, கட்சியில் இருந்து விலகி போயிருக்கின்றார்கள். எல்லா காலகட்டத்திலும் இது நடந்துள்ளது. ஆனால், நாங்கள் யாரையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீங்கள் உள்ளீர்கள், நீங்கள் இல்லை எனக் கூற விரும்பவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி நாம் உருவாக்கியது. இது 2024 பாராளுமன்றத்திற்கான தேர்தல். வருவதும், வராததும் அவரவர் விருப்பம். ஆகையால், அமித்ஷா கூறியதை யாரும் ட்விஸ்ட் பண்ண வேண்டாம். அவர் பொதுவான கேள்விக்கு, பொதுவான ஒரு பதிலைத் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாட்டில் யார் தலைமை தாங்குவது எனக் கூறுவதற்கு இன்னும் நேரம் இருக்கு. அதற்கான நேரம் வரும்போது பேசலாம்.

மைனாரிட்டி என்ற வார்த்தை பயன்படுத்த விரும்பவில்லை. நான் இந்திய மக்கள், தமிழக மக்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றேன். காரணம், எல்லோருக்கும் ஒவ்வொரு பிரச்னை வரும். நாம் 2019 தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் இரண்டாவது முறை முத்தல்லாக்கை எடுப்போம் எனத் தெரிவித்தோம்.

அதை ஆகஸ்ட் மாதத்தில் எடுத்தோம், அது அனைவருக்கும் தெரியும். அதனால் மைனாரிட்டி, மெஜாரிட்டி பார்த்து அரசியல் செய்யக்கூடிய கட்சி பாஜக இல்லை. ஆகையால், தமிழக மக்களை தமிழக மக்களாக பார்க்கின்றோம். மதத்தை வைத்து, சாதியை வைத்து பிரித்துப் பார்க்கவில்லை. அவர்களுடைய வளர்ச்சிக்கு, அவர்களுடைய தேவையை பாஜக பூர்த்தி செய்யுமா என பார்க்கின்றனர்.

இதுமட்டுமின்றி, பிரதமர் பாராளுமன்றத்தில் 2 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். 3வது முறை ஆட்சிக்கு வந்தால், இன்னும் பெரிய முடிவுகளை எடுப்போம் என்று. அதனால் இது எல்லோருக்கும் பொருந்தும். ஆகையால், 2024 தேர்தல் களம் வித்தியாசமானது. இதற்கு முன்பு தேர்தல் களம் இதுபோல் கிடையாது. மோடிதான் வெற்றி பெறுவார் என தெரிந்து நடக்கக்கூடிய தேர்தல் இது. மைனாரிட்டி, மெஜாரிட்டி வைத்து யார் தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார்களோ, அவர்களுக்கும் தெரியும், 2024 தேர்தல் களத்தில் இவை அனைத்தும் மாறும் என்று.

கூட்டணியைப் பொறுத்தவரை, இன்னும் நேரம் இருக்கு. எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், தனிப்பட்டு அவர்கள் கட்சியின் வளர்ச்சியைப் பார்ப்பார்கள். அந்த நேரத்தில் கட்சி எப்படி இருக்கு என பார்ப்பார்கள். ஏனென்றால், தமிழக கட்சியைப் பொறுத்தவரை, பிராந்திய கட்சிகள் மாநிலத் தேர்தல் முதன்மையானது, தேசிய தேர்தல் அதற்கு பின்னர்தான்.

ஏனெனில், தேசிய தேர்தலில் பெரிய அளவில் பங்கு வகிக்கப்போவது இல்லை. காலம் காலமாக அப்படித்தான் பார்க்கிறோம். அதனால் தமிழ்நாட்டில் கூட்டணி என்பது கடைசி நேரத்தில்தான் ஒரு முடிவுக்கு வரும். பிப்ரவரி முடிவுக்குள் நமக்கு தெளிவான ஒரு முடிவு கிடைக்கும், அன்று கூட்டணி பற்றி பேசலாம்.

ஒவ்வொரு தேர்தலும் வித்தியாசமானது. 2024 ஏன் வித்தியாசமானது என்றால், எல்லோருக்கும் தெரியும் மோடி திரும்பி வருவார் என்று. அனைவருக்கும் தெரிந்த தேர்தல். எங்களைப் பொறுத்தவரை யாரையும் இழுக்கப் போவது கிடையாது. இழுப்பது என்ற வார்த்தை பாஜகவுக்கு பொருந்தாது. காரணம் யாருக்கு விருப்பம் உள்ளதோ, யார் சில விஷயங்களை ஏற்றுக் கொள்கின்றார்களோ, அவர்கள் நம்முடன் பயணம் செய்கிறார்கள்.

நேற்றைய கட்சி அலுவலக திறப்பு விழாவில், சில கூட்டணிக் கட்சி தலைவர்கள் நம்முடன் பங்கேற்றிருந்தனர். மற்றபடி என்ன பேசுகிறோம், அவர்கள் என்ன கேட்கிறார்கள் அதெற்கெல்லாம் நேரமும், காலமும் இருக்கு. யாரையும் வலுக்கட்டாயமாக இழுக்கும் வேலையை பாஜக செய்யாது. ஏனென்றால், கட்சியின் அடிப்படைக் கொள்கையே வேறு.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, நம்பர்ஸ்ல கட்சி இருக்கு. ஆனா நரேட்டிவ்ல ஒன்றுமே இல்லை. ஆகையால், இந்த தேர்தலைப் பொறுத்தவரை எங்களிடம் 10 கட்சி இருக்கு, 12 கட்சி இருக்காங்க, நாங்கதான் ஜெயிப்போம். இதெல்லாம் இந்த தேர்தலில் இல்லை. இது பெரிய நரேட்டிவ் இருக்கக் கூடிய தேர்தல், மோடி 3வது முறை வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்.

அதனால் கூட்டணி பலம், நம்பர், இத்தனை கட்சிகள் இருக்கின்றார்கள் என்பது இந்த தேர்தலுக்கு பொருந்தாது. ஒரு தொங்கு பாராளுமன்றத்திற்கு அல்லது எந்த கட்சி வரும் எனத் தெரியாது. 20 எம்பி முக்கியம், 10 எம்பி முக்கியம், 2 எம்பி முக்கியம் அந்த நிலைமை வேறு. ஆனால், இந்த நிலைமையை பொறுத்தவரை, பிரதமர் மோடி மிகத் தெளிவாக கூறியிக்கிறார். நாட்டு மக்களுடைய மனநிலை, என்டிஏ 400 சீட்டுகளைத் தாண்டும், பாஜக 370-ஐ தாண்டும். அதனால் இதில் நம்பர் கேம் கிடையாது. நரேட்டிவ் மட்டும்தான்.

தமிழ்நாடு முதலமைச்சர் 10 நாட்கள் கழித்து ஸ்பெயினில் இருந்து வந்திருக்கிறார். முதலமைச்சர் காலையில் செய்தியாளர்களிடம் 3,440 கோடி ரூபாய் கையெழுத்து போட்டுள்ளோம் என்று தெரிவித்தார். இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கக் கூடிய நிறுவனங்கள், அந்த நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக ஸ்பெயினுக்குச் சென்று கையெழுத்து போட்ட முதல் முதலமைச்சர், இந்திய அரசியல் வரலாற்றிலே மு.க.ஸ்டாலின்தான். அவை அனைத்தும் ஏற்கனவே இருக்கின்ற கம்பெனிதான். புதுசா எந்த கம்பெனியும் கிடையாது.

அதிலும் முதலமைச்சர் ஸ்பெய்னில் ரோகோ என்ற கம்பெனியுடன் கையெழுத்திடும்போது, ஈரோட்டில் இருக்கும் ரோகோவில் மாசுபாட்டுக்காக நோட்டீஸ் கிடைத்தது. அதனால் புதிதாக எதுவும் இல்லை. இருக்கக்கூடிய கம்பெனிகள் அவர்களுடைய சுழற்சி முதலீட்டு நீட்டிப்புக்காக கையெழுத்திட்டுள்ளார். ஆகையால், முதலமைச்சரின் ஸ்பெயின் பயண பேட்டி என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்குத்தான் முதலமைச்சர் சென்றாரா> துபாய்க்கு சென்றார், 6 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என்றார், தற்போது வரை வரவில்லை.

முதலமைச்சர் 3 முறை வெளிநாட்டிற்குச் சென்றிருக்க காரணத்தால், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். துபாய்க்கு போன 6 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆச்சு? தற்போது 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் கூறிய நிறுவனங்கள் என்ன? அவை என்ன நிலையில் உள்ளது? பணம் வந்திருக்கா? வரவில்லை என்றால், ஏன் வரவில்லை? அதே நிலைமை தான் ஸ்பெயின் பயணமும் அமையும் என்ற அச்சம் உள்ளது.

தமிழகத்தின் வெள்ள பாதிப்பை பொறுத்தவரை, மத்திய அரசு உறுதியாக உள்ளது. மோடி 2 கேபினட் அமைச்சர்களை அனுப்பி வைத்தார். மத்திய அரசை பொறுத்தவரை சென்னைக்குத் தேவையான நிதியைக் கொடுத்துள்ளனர். எஸ்டிஆர்எஃப் நிதி இன்னும் தீரவில்லை. என்டிஆர்ஃப்-ஐ பொறுத்தவரை ஒரு சிஸ்டம் உள்ளது. அதன்படிதான் அந்த பணம் வரும். தமிழ்நாட்டிற்கு விகிதாச்சார முறைப்படி நிதி வழங்கப்படும்.

தேசியத் தலைவர் ஜி.பி.நட்டா சென்னை வருவதற்கான காரணம், 'என் மண், என் மக்கள்' யாத்திரையுடைய 200வது தொகுதி சென்னையில் உள்ளது. அதற்காக வந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆனால், சென்னையைப் பொறுத்தவரை மற்ற பகுதிகளில் யாத்திரை நடத்தியது போல் செய்ய முடியாது.

மக்களுக்கு தொந்தரவு இருக்கக் கூடாது, போக்குவரத்து நெரிசல் இருக்கக் கூடாது என்பது குறித்து 2 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும். ஆனால் ஜெ.பி.நட்டா வருவது உறுதி, எங்கு வருகிறார், எப்போது வருகிறார் என காவல்துறை அனுமதி கிடைத்தவுடன் முறைப்படி அறிவிக்கப்படும்.

பாஜகவை பொறுத்தவரை அவர்கள் என்ன செய்கிறார் என அவர்களுக்குத் தெரியும். ஆனால் திமுகவைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கின்றோம் எனக் கூறுகின்றனர், ஆனால் திமுகவிடமே ஒரு தெளிவு இல்லை. டி.ஆர்.பாலு ஒரு ஊழல்வாதி மட்டும் அல்ல, தரம் தாழ்ந்த அரசியல்வாதி. கடந்த 50 வருடமாக அரசியலில் இருந்தோம் எனக் கூறுவதை விட, இந்த 50 வருடத்தில் என்ன செய்தார் எனக் கூற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.