விஜயவாடா: ஊடக வித்தகர் மறைந்த ராமோஜி குழும தலைவர் ராமோஜி ராவின் நினைவேந்தல் கூட்டம் ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் உள்ள அனுமோலு கார்டன்சில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர பிரதேசம் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, மறைந்த ராமோஜி குழம தலைவர் ராமோஜி ராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றார்.
ஊடக வித்தகரும் ராமோஜி குழும தலைவருமான ராமோஜி ராவ் கடந்த ஜூன் 8ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 87. இந்நிலையில், ராமோஜி ராவின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு ஆந்திர பிரதேச அரசு தரப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. விஜயவாடாவில் உள்ள கனூர் அடுத்த அனுமோலு கார்டன்சில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆந்திர பிரதேசம் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யான், மாநில கல்வித் துறை அமைச்சர் நாரா லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் எடிட்டர்ஸ் கில்ட் பிரதிநிதிகள், மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், இயக்குநர் ராஜமவுலி, ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் ராமோஜி ராவின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராமோஜி ராவின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. விருந்தினர்கள் அனைவரும் அதை பார்த்தனர்.
இதையும் படிங்க: "ஓஎம்ஆர் வினாத் தாள் குறித்து புகாரளிக்க கால அவகாசம் உண்டா?"- தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! - NEET UG 2024