ETV Bharat / bharat

பாஜக 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நிதின் கட்காரி, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் மீண்டும் போட்டி! - BJP 2nd Lok Sabha candidates list - BJP 2ND LOK SABHA CANDIDATES LIST

BJP 2nd Candidates list: மக்களவைத் தேர்தலுக்கான பாஜக இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 7:49 PM IST

Updated : Apr 3, 2024, 3:38 PM IST

டெல்லி : மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜகட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகின்றார்.

இந்த பட்டியலில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த பட்டியலில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுகின்றார். அதேபோல் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரிலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஸ்ட்ரா மாநில நாக்பூரிலும் போட்டியிடுகின்றனர்.

கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரியில் போட்டியிடுகின்றார். பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகா மாநிலம் தார்வாட்டில் போட்டியிடுகிறார். அரியானா முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார். இதன் காரணமாகவே அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க : ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம், வேலைவாய்ப்பில் 50% ஒதுக்கீடு - காங்கிரசின் அதிரடி உத்தரவாதம்!

Last Updated : Apr 3, 2024, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.