கோடா: ராஜஸ்தான் மாநிலம் ஜலவர் மாவட்டம் கடோத்கச் சதுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யஸ்வந்த். நண்பர்களுடன் சிறுசிறு கூலி வேலைகள் செய்து யஸ்வந்த் தனது வாழ்க்கையை நகர்த்தி வந்தார். இந்நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து யஸ்வந்த் இன்ஸ்டாகிராம் ரிலீஸ் செய்து உள்ளார்.
போலியாக துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்று நண்பர்கள் ரிலீஸ் செய்து உள்ளனர். அப்போது யஸ்வந்த் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட நிலையில் படுகாயம் அடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன நண்பர்கள் சுதாரித்துக் கொண்டு யஸ்வந்தை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
அங்கு யஸ்வந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் யஸ்வந்தின் சடலத்தை கைப்பற்றி பிணவறைக்கு அனுப்பினர். மேலும், யஸ்வந்தின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
இளைஞர்களுக்கு எப்படி நிஜ துப்பாக்கி கிடைத்தது என்றும் சம்பவம் குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தில் 20 வயது இளைஞர் நிஜ துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆபாச வீடியோ வழக்கு: "உண்மை விரைவில் வெல்லும்"- பிரஜ்வல் ரேவண்ணா! - Karnataka Prajwal Revanna Case