டெல்லி: தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞரின் சிறுகுடலில் இருந்து 3 செ.மீ அளவுள்ள கரப்பான் பூச்சியை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் மேம்பட்ட எண்டோஸ்கோபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 10 நிமிடங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளை எதிர்கொண்ட இளைஞர் வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, இளைஞரின் மேல் இரைப்பை குடலில் மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட பரிசோதனையில் இளைஞரின் சிறு குடலில் உயிருடன் கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், "இரண்டு தடங்களை கொண்ட சிறப்பு எண்டோஸ்கோப்பி தொழிநுட்பத்தை பயன்படுத்தி இளைஞரின் வயிற்றில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றியுள்ளோம்" என்கிறார் மருத்துவர் வாத்ஸ்யா. இந்த எண்டோஸ்கோப்பி இரு தடங்களை கொண்டதாக, அதாவது, ஒன்று காற்று மற்றும் நீர் உட்செலுத்துவதற்கும் மற்றொன்று உறிஞ்சுவதற்கும் பயன்படுகிறது.
மேலும், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதுபோன்ற வழக்குகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்த மருத்துவர் எண்டோஸ்கோபி மூலம் 10 நிமிடங்களில் அகற்றப்பட்டதாகவும் கூறினார். இந்நிலையில், நோயாளி சாப்பிடும் போது கரப்பான் பூச்சியை விழுங்கியிருக்கலாம் அல்லது தூங்கும் போது வாயின் வழியாக நுழைந்திருக்கலாம் என்றார். இந்த மாதிரியான சூழ்நிலையில் விரைவாக சிகிச்சை அளிக்காவிட்டால் கடுமையான சிக்கல்களை வழிவகுக்கும் என்பதையும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்