ETV Bharat / bharat

உ.பி இடைத்தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் சமாஜ்வாடியின் சைக்கிள் சின்னத்தில் போட்டி..!

உத்தரப் பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் சம்ஜாவாடியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 9 பேரும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் கேட்ஹரி (அம்பேத்கர் நகர்), கர்ஹால் (மெயின்புரி), மீராபூர் (முசாபர்நகர்), காசியாபாத், மஜவான் (மிர்சாபூர்), சிஷாமாவ் (கான்பூர்), கெய்ர் (அலிகார்), புல்பூர் (பிரயாக்ராஜ்), மற்றும் குந்தர்கி (மொராதாபாத்) ஆகிய 9 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தொகுதிகளில் 8 சட்ட மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற தேர்தலில் எம்பி-க்களாக தேர்வு செய்யப்பட்டதால் இந்த தொகுதிகள் காலியாகின. எம்எல்ஏ-வாக இருந்த இர்பான் சோலங்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் சிஷாமாவ் தொகுதி காலியானது. தற்போது, 9 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, காங்கிரஸ் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட இரண்டு தொகுதிகளை வழங்க அகிலேஷ் யாதவ் முன் வந்தார். அதன்படி, காங்கிரஸ் காசியாபாத் மற்றும் கெய்ர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் என கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது மேற்கண்ட 9 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: 'என் மேல அன்பே இல்ல'.. தங்கையால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த சோதனை! கோர்ட் வரை சென்ற விஷயம்!

அந்த ட்வீட்டில், 'இந்த தேர்தல் சீட்டுகளை பற்றியது அல்ல, வெற்றியைப் பற்றியது. இந்த வியூகத்தின் கீழ், சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிளில் 9 தொகுதிகளிலும் இந்திய கூட்டணியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

காங்கிரஸும், சமாஜ்வாடியும் ஒன்றிணைந்து மிகப்பெரிய வெற்றிக்காக தோளோடு தோள் நிற்கின்றன. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றியின் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறது.

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் பூத் மட்டத் தொண்டர்களின் ஆதரவால் சமாஜ்வாடி கட்சியின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன், 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்தியக் கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றிபெறும் உறுதியுடன் உள்ளனர்.

நாட்டின் அரசியல் சாசனத்தையும், நல்லிணக்கத்தையும் காப்பாற்றும் தேர்தல் இது. அனைவருக்கும் எங்கள் வேண்டுகோள் என்னவென்றால், ஒரு வாக்கு கூட குறையக்கூடாது, ஒரு வாக்கு கூட பிரிக்கப்படக்கூடாது.

நாட்டின் நலனில் அக்கறை நிறைந்த இந்தியக் கூட்டணியின் இந்த ஒற்றுமை இன்றும், நாளையும் புதிய வரலாற்றை எழுதும்'' என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.