ETV Bharat / bharat

பாஜகவில் இணைந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்கள் 18 பேர்.. டெல்லியில் நடந்தது என்ன? - Minister Rajeev Chandrasekhar

டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர் உட்பட 18 பேர் இன்று தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

பாஜக
பாஜக
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 12:20 PM IST

Updated : Feb 7, 2024, 2:27 PM IST

டெல்லி: மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர் உட்பட 18 பேர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், கொங்கு மண்டலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுமான, வடிவேல், ஆர்.துரைசாமி, எம்.வி.ரத்தினம் உள்ளிட்ட 13 பேரும், திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேரும் என 18 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.

பாஜக-வில் இணைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்:

1. K.வடிவேல் - கரூர் (1974,1984),

2. துரைசாமி - கோவை (2011),

3. P.S.கந்தசாமி - அரவக்குறிச்சி (1980),

4. M.V.ரத்தினம் - பொள்ளாச்சி (1980),

5. R.சின்னசாமி - சிங்காநல்லூர் (2006,2011),

6. V.R.ஜெயராமன் - தேனி (1977,1980,1984),

7. S.M.வாசன் - வேடச்சந்தூர் (1977),

8. P.S.அருள் - புவனகிரி (2001),

9. R.ராஜேந்திரன் - காட்டுமன்னார்கோயில் (1991),

10. செல்வி முருகேசன் - காங்கேயம் (2001),

11. A.ரோகினி - கொளத்தூர் (2001),

12. S.E.வெங்கடாசலம் - சேலம் (2001),

13. முத்து கிருஷ்ணன் - கன்னியாகுமரி (1980).

மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ R.தங்கராஜு - ஆண்டிமடம் (1991), தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ K. தமிழழகன் - திட்டகுடி (2011), திமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் S. குருநாதன் - பாளையங்கோட்டை (1989), டாக்டர். V. குழந்தை வேலு - சிதம்பரம் (1980), கோமதி ஸ்ரீநிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமன் (1996) உள்ளிட்டோரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

அதோடு இவர்கள், தங்களுக்கான உறுப்பினர் அட்டையைப் பெற்ற போது மோடி வாழ்க.. பாஜக வாழ்க.. என்று முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர்களான எல்.முருகன், பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:

Last Updated : Feb 7, 2024, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.