ETV Bharat / bharat

பள்ளிப் புத்தகத்தில் தமன்னா குறித்த பாடம்.. கொந்தளித்த பெற்றோர்! - Tamannaah in School Book Chapter

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 10:48 PM IST

Tamannaah Bhatia Subject in School book: பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி பாடப்புத்தகத்தில் தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றிருப்பதற்கு அப்பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகை தமன்னா புகைப்படம்
நடிகை தமன்னா (Credits - ETV Bharat Tamil Nadu)

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹெபலில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடப் புத்தகத்தில் 1947 முதல் 1962 வரையிலான காலக்கட்டத்தில் சிந்த் (Sindh) சமூக மக்களின் பிரிவினை மற்றும் இடம்பெயர்வு குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சிந்த் சமூகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களாக நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தமன்னா குறித்த தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பெற்றோர் கூறுகையில், “நடிகை தமன்னா கவர்ச்சி மற்றும் சில துணிவுமிக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் கமர்ஷியல் படங்களில் நடித்துள்ளார். அப்படி இருக்கையில், எவ்வாறு குழந்தைகளின் ரோல் மாடலாக தமன்னா இருக்க முடியும்?

நீங்கள் இணையத்தில் தமன்னா குறித்து தேடினால் நிச்சயமாக சம்பந்தமில்லாத தகவல்களே கிடைக்கும். இதனால் குழந்தைகள் திசைமாறும் சூழலும் உள்ளது. எனவே, இது தொடர்பான பாடப் பகுதிகளை நீக்கச் சொன்ன பிறகும், பள்ளி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை” என்றனர்.

மேலும், இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த விளக்கத்தில், “1947 முதல் 1962 வரையிலான சிந்தி பிரிவினைக்குப் பிறகு வாழ்க்கை, இடம்பெயர்வு, சமூகம் மற்றும் மோதல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சமூகத்தைச் சேர்ந்த சாதனையாளர்கள், சிந்தி மொழி கலாச்சாரத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்த பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால் பாடப் புத்தகத்தில் தவறில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா கேரக்டரில் திருச்சி சாதனா.. அரசியல் பேசுகிறதா அறம் செய்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.