டெல்லி: பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர் தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொகிந்தர் பகத் வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷீத்தல் அங்குரலை விட 37 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று மொகிந்தர் பகத் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
And it's officially announced now...
— AAP Punjab (@AAPPunjab) July 13, 2024
AAP candidate Shri @mohinderbhagat_ has WON with a MASSIVE MARGIN of 37,325 votes in #JalandharWest by-poll
It's the victory of @BhagwantMann Govt's pro-people policies 💯
Congratulations to each & every volunteer of the Aam Aadmi Party as… pic.twitter.com/0bT8EntRde
அதேபோல் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் தேஹ்ரா தொகுதியில் பாஜக வேட்பளர் ஹோசியரை எதிர்த்து போட்டியிட்ட முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்குவின் மனைவி 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
இதையடுத்து தாலியரா, கங்ரா உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்க்கியும் கொண்டாடி வருகின்றனர். பீகார் மாநிலத்தின் ருபவுலி, இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க், மத்திய பிரதேசத்தின் அமரவரா, பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், மங்கலுர், மேற்கு வங்கம் மாநிலத்தில் ராய்கஞ்ச், ரனகட் தக்ஷின், பாக்டா, மணிக்தலா மற்றும் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி ஆகிய 13 தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
#WATCH | Bye Election to Assembly Constituencies: Congress workers and supporters celebrate in Dhaliara, Kangra as the party's candidate is leading on Dehra Assembly seat
— ANI (@ANI) July 13, 2024
Kamlesh Thakur, wife of Himachal Pradesh CM Sukhvinder Singh Sukhu is party's candidate from the Dehra… pic.twitter.com/hFEgyPJiNJ
இடைத்தேர்தல் நடைபெற்ற 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று (ஜூலை.13) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் ராய்கஞ்ச், ரனகட் தக்ஷின், பாக்டா, மணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. அதேபோல் இமாச்சல பிரதேசத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க் ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் மற்றும் மங்களர் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கு பின் நடந்த முதல் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி முகம் காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா எம்எல்சி தேர்தல்: வெற்றி வாகை சூடிய பாஜக கூட்டணி! இந்தியா கூட்டணி தோல்விக்கு என்ன காரணம்? - Maharashtra MLC Election