ETV Bharat / bharat

டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்த விபத்தில் ஒருவர் பலி; 5 பேர் கடுகாயம்! - DELHI AIRPORT ROOF COLLAPSED - DELHI AIRPORT ROOF COLLAPSED

A Roof Collapsed in Terminal 1 of Delhi Airport: டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி விமான நிலையம் டெர்மினல் -1ல் மேற்கூரை இடிந்து விபத்து
டெல்லி விமான நிலையம் டெர்மினல் -1ல் மேற்கூரை இடிந்து விபத்து (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 7:27 AM IST

டெல்லி: டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் டெல்லி விமான (Indira Gandhi International Airport) நிலையத்தின் டி-1 டெர்மினல் ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மேற்கூரையில் இருந்த ராட்சத கம்பி சரிந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார்களின் மீது விழுந்தது. இதனால், அங்கிருந்த கார்கள் அப்பளம் போல் நொறுங்கின.

இது தொடர்பாக, தகவலறிந்து விரைந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் காருக்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்தார். மேலும் 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலத்த காயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: கர்நாடகாவின் ஹாவேரியில் அதிகாலை நடந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.