கைமூர்: பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் தேவ்களி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எஸ்யுவி கார், கன்டெய்னர் டிரக் மற்றும் இரு சக்கர வாகனம் என அடுத்தடுத்து வாகனங்கள் கடுமையாக மோதிக் கொண்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போலீசார் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து பகுதியில் கிடக்கும் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பட்டு உள்ளன.
விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட நிலையில் அதன் மீது கன்டெய்னர் டிரக் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்துக் காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : உபி பட்டாசு ஆலை வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!