புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் 71 வகையான மருந்துகள் தரமான நிலையில் இல்லை என செப்டம்பர் மாதம் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு 6 மண்டல அலுவலகங்கள், நான்கு துணை மண்டல அலுவலகங்கள் உள்ளன. ஏழு ஆய்வகங்களும் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன. மருத்துகளை இறக்குமதி செய்வதற்கான ஒழுங்குமுறை கட்டுப்பாடு, புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்குதல், மருந்துகளை கிளினிக்கல் பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இந்த அமைப்பின் மத்திய ஆய்வகங்கள் செப்டம்பர் மாதத்தில் 49 போலி மருந்துகளை கண்டறிந்துள்ளன.
இருமல் டானிக்குகள், கண் சொட்டு மருந்துகள், சோடியம் காப்ஸ்யூல்கள், ஊசி, கால்சியம் மற்றும் வைட்டமின் டி3 மாத்திரைகள் உள்ளிட்டவை தரமான நிலையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதே போல மாநில ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 18 மருந்துகள் தரமான நிலையில் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. செப்டம்பர் மாதத்துக்கான மருந்துகளின் தரப்பரிசோதனை நிலை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு (CDSCO )அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
"தரம் இல்லாத மற்றும் போலியான மருந்துகள் வெவ்வேறு தொகுதி எண்களைக் கொண்டவை. இந்த குறிப்பிட்ட தொகுதி எண் மருந்துகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும்,”என்று ஒரு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்