ஹைதராபாத்: நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) எனப்படும் தேசிய தேர்வு முகமை, நடப்பு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைகாக 'நீட்' நுழைவுத்தேர்வு (NEET Exam) நடத்துகிறது. அந்த வகையில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேட்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நாடு முழுவதும் உள்ள 557 நகரங்கள் இன்று பிற்பகல் 2 மணி மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
இந்த நிலையில் நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்தும் , மற்றும் வானிலை மாற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்வர்கள் முன் கூட்டியே தேர்வு மையங்களுக்கு செல்லும் வகையில் திட்டமிட வேண்டும்.
- ஹால்டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்கள் தேர்வு மையங்களில் அனுமதி கிடையாது.
- அதே போல் நகைகள், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் பேனா, ப்ளூடூத், இயர் போன் ,பெல்ட், பர்ஸ், வாட்ச் என எதுவும் கொண்டு செல்ல அனுமதி இல்லை மாணவர்களுக்கு அனுமதி கிடையாது.
- எளிதில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை மட்டும் எடுத்துச் செல்லலாம்.
- தேர்வு தொடங்கி முதல் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி அரை மணி நேரம் மாணவர்கள் கழிவறை செல்ல அனுமதி கிடையாது.
- மாணவர்கள் குறைந்த உயரம் உள்ள காலணிகள் அணிந்து வர அனுமதி உண்டு. ஷூ அணிந்து வர அனுமதி கிடையாது.
- பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் மதம் சார்ந்த ஆடைகள் அணிந்து வருவோர் சோதனைக்கு வசதியாக 12.30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பம்: இந்த ஆண்டு பயோமெட்ரிக் ஆதென்டிஃபிகேஷன் முறை (Biometric Authentication) மூலம் மாணவர்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தேர்வறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களைக் கண்காணிக்க இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும், முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட இருக்கிறது. மேலும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவர், செவிலியர் மட்டும் இல்லை.. இவங்க இல்லனாலும் திண்டாட்டம் தான்.. மருத்துவச்சிகளின் மகத்துவம்!