ஹல்த்வானி (உத்தரகண்ட்): உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கலவரத்தில் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 71 பேர் மீது போலீசார் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, போலீசார் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் மாலிக் உள்ளிட்ட 36 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்ராஸா மற்றும் மற்றொரு இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டதாகக் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இடிக்க வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நய்னிடால் மாவட்டம், ஹல்த்வானி, பன்பூல்புரா பகுதியில் கலவரம் நடைபெற்றதாக முகானி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தில் கற்கள் வீசப்பட்டதில் பல அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது.
இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 98 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். இதனையடுத்து 98 பேரின் நீதிமன்ற காவலை 28 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நகராட்சி போட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஹல்த்வானி போலீசார், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்தனர்.
நய்னிடால் காவல் கண்காணிப்பாளர் பிரகலாத் நாராயண் மீனா இந்த வழக்கு குறித்துக் கூறுகையில், இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சமும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஹல்த்வானி நகராட்சிக்கு மர்ம நபர்களால் பல்வேறு விதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் வாகனங்களும் சேதமடைந்தது.
இதையும் படிங்க: தெலங்கானா தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு? - எந்த தொகுதியில் அதிகம்? - Telangana Voting Update