தமிழ்நாடு

tamil nadu

மத்திய பட்ஜெட் 55 சதவீதம்தான் திருப்தி - லட்சுமி நாராயணசாமி!

By

Published : Feb 1, 2020, 11:47 PM IST

கோவை: மத்திய பட்ஜெட் தொடர்பாக இந்திய வர்த்தக சபை கோவை கிளையின் தலைவர் லட்சுமி நாரயணசாமி பேசுகையில், ''ஆட்டோமொபைல் தொழில் துறை சந்தித்துவரும் பொருளாதார மந்தநிலையை சீராக்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. புதிய நிறுவனங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 5 உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாங்கள் கோவையில் ஒரு உற்பத்தி மையம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். கடந்த பட்ஜெட்டை காட்டிலும் இந்த பட்ஜெட் சரியாக இருந்த போதிலும், 55 சதவீதம்தான் திருப்தியை கொடுத்துள்ளது'' என்று தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details