தமிழ்நாடு

tamil nadu

அரசுப்பள்ளிகளில் டிஜிட்டல் அட்டெண்டென்ஸ்: நெல்லையில் 1,536 பள்ளிகளில் அறிமுகம்!

By

Published : Aug 1, 2022, 5:02 PM IST

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 1,536 பள்ளிகளில் இன்று முதல் EMIS செயலியை செயல்படுத்துகின்றனர் என முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் அட்டன்டன்ஸ்: நெல்லையில் 1,536 பள்ளிகளில் அறிமுகம்..!
அரசு பள்ளிகளில் டிஜிட்டல் அட்டன்டன்ஸ்: நெல்லையில் 1,536 பள்ளிகளில் அறிமுகம்..!

நெல்லை:தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவதை உறுதிசெய்யும் வகையில் EMIS ( Education management information system ) எனப்படும் செயலியில் பதிவு செய்யும் முறை தொடங்கியுள்ளது. இதுவரை எழுத்து வழியில் வருகைப்பதிவேற்ற நோட்டில் வருகை பதிவு செய்யப்பட்டு வந்தது.

இந்த பழைய முறையில் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்தால் அந்த தகவல் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தெரிவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். ஆனால், இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் செயலி பதிவேட்டு முறையினால் அன்றாட மாணவர்கள், ஆசிரியர்கள், வருகைப்பதிவை சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து உறுதிசெய்து கொள்ள முடியும்.

இந்த வருகைப்பதிவேட்டு முறையை டிஜிட்டல் மயமாக மாற்றும் பணி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் கடந்த ஆறு மாதங்களாக செயல்முறையில் முன்னோட்டமாக நடைபெற்றது. இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப்பதிவேடு எழுத்தில் பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, முழுமையாக டிஜிட்டல் மயமாகும் பணியானது செயலி மூலமாகத் தொடங்கியுள்ளது என அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

செயலில் பதிவு செய்யும்போது லொகேஷன் இருப்பிட ஆதாரம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதால் இதில் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து கொண்டு மட்டுமே செயலியைப்பதிவு செய்ய முடியும். மேலும் பள்ளியிலிருந்து வேறு எங்கேயும் சென்றால் அதனை முழுமையாக இருப்பிட விவரம் அறியும் செயலி மூலம் கண்டறிய முடியும் என்பதால் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக ஆசிரியர்கள் தரப்பில் பார்க்கப்படுகிறது.

அரசுப்பள்ளிகளில் டிஜிட்டல் அட்டெண்டென்ஸ்: நெல்லையில் 1,536 பள்ளிகளில் அறிமுகம்!

இருந்தும் கடந்த ஆறு மாத காலங்களில் பயன்பாட்டில் இருந்தபோது சர்வர் பிசி என அடிக்கடி பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. எனவே, இந்த செயலியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கையும் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details