தமிழ்நாடு

tamil nadu

நியூட்ரினோ குறித்து சட்டப்பேரவையில் தெளிவுபடுத்த வேண்டும் -  பி.ஆர். பாண்டியன்

By

Published : Jul 16, 2019, 1:24 PM IST

தேனி: நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பி. ஆர். பாண்டியன்

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில், ரூ.1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன.

அரசு சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும்

இந்நிலையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், நியூட்ரினோ திட்டம் அமைக்க மத்திய அணுசக்தி துறை அனுமதி அளித்திருக்கிறது என எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனால், நியூட்ரினோ திட்டம் குறித்த அச்சம் பொட்டிபுரம் பகுதி மக்களிடம் நிலவியது.

இச்சூழலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைக்கு செல்ல இருந்தார். ஆனால், முத்தாலம்மன் கோயில் அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பி.ஆர் பாண்டியன்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நியூட்ரினோ என்கிற திட்டத்தால் பொட்டிபுரம், புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே, நியூட்ரினோ திட்டம் குறித்த பொதுமக்களின் அச்சத்தை கலைக்க சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நியூட்ரினோ திட்டத்தைப் பேரழிவு திட்டம் என்கிறார்கள். இதனால் விவசாயம் அழிந்து போகும், கால்நடை வளர்ப்பு பாதிப்படையும். இதுகுறித்து, தமிழக அரசு உரிய விளக்கம் கொடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details