தமிழ்நாடு

tamil nadu

உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி தரிசன விழா: முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியர்!

By

Published : Dec 28, 2020, 8:26 PM IST

ராமநாதபுரம்: உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள தரிசன விழா குறித்த முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (டிச.28) ஆய்வு செய்தார்.

கோயிலில் ஆய்வு செய்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கோயிலில் ஆய்வு செய்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (டிச.28) கோயிலுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ராமநாதபுரம் உத்தரகோசமங்கையிலுள்ள மங்களநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு வாய்ந்த மரகத நடராஜர் சிலை உள்ளது. இத்திருக்கோயிலில் டிச.29, 30ஆகிய தினங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும், இவ்விழாவின்போது மரகத நடராஜர் சிலைக்கு சந்தனங்கள் பூசப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மறுநாள் காலை சிலை மீது மீண்டும் சந்தனம்
பூசப்படும்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு:

ஆனால், தற்போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கூட்டநேரிசல் ஏற்படாத வகையில் போதிய பேரிகாட் தடுப்புகள் அமைத்திடவும், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும், குப்பைகள் தேங்காத வகையில் சுற்றுப்புற சுகாதார தூய்மை பணிகளை மேற்டகொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதுவாக தயார் நிலையில் மருத்துவக் குழுக்கள் அமைத்திடவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடவும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த மனோன்மணி அம்பிகையின் திருக்கல்யாணம்!

ABOUT THE AUTHOR

...view details