தமிழ்நாடு

tamil nadu

கள்ளக்குறிச்சி அருகே தீ விபத்து: 5 வீடுகள் சேதம், ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

By

Published : Nov 6, 2020, 8:25 AM IST

கற்றில் மின்கம்பிகள் உரசி ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. இவ்விபத்தில், ஐந்து வீடுகளில் இருந்த, ரூ. 30 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.

fire-accident
fire-accident

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர், ஏழுமலை. குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று (நவ.5) மதியம் காற்று வேகமாக வீசியதில், மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பொறிகள் ஏழுமலையின் குடிசையில் பட்டு, தீ வேகமாகப் பரவத் தொடங்கியது.

இந்த தீ அருகில் இருந்த ரங்கசாமி, சின்னத்தம்பி, இளையராஜா, நாராயணன் ஆகியோரது வீடுகளுக்கும் வேகமாகப் பரவியது. இந்த விபத்தில் 5 வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள், மேலும் தீ பரவாமல் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து திருப்பாலபந்தல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில், 5 பேரின் வீடுகளில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details