தமிழ்நாடு

tamil nadu

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டைஃபி அமைப்பினர் கண்டன பேரணி.!

By

Published : Jan 23, 2020, 11:15 PM IST

கோயம்புத்தூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) கண்டன பேரணி நடத்தினர்.

கோவை குடியுரிமை சட்டம் டைஃபி போராட்டம் குடியுரிமை சட்டம் டைஃபி போராட்டம் கோவை குடியுரிமை சட்டம் போராட்டம் Kovai DYFI Protest Against CAA DYFI Protest Against CAA Kovai Protest Against CAA
Kovai DYFI Protest Against CAA

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது.

இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த பேரணி நகரின் முக்கிய சாலை வழியாக சென்றது. பல்வேறு அமைப்புகள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது போல் பாஜக, இந்து அமைப்புகள் இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

டைஃபி அமைப்பினர் கண்டன பேரணி

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை இருசக்கர வாகனத்தில் 1800 கி.மீ தொலைவு பயணம் செய்து வருகின்றனர். இந்த பயணமானது ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - மாணவ, மாணவிகள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details