இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (மே.14) லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக (தவ்-தே) மாறி தற்போது மத்தியக் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் வலுபெறக்கூடும். ’டவ் தே’ புயலானது தற்போது கர்நாடகா கரையிலிருந்து மேற்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது
இதன் காரணமாக இன்று (மே.15) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், கிருஷ்ணகிரி கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள், தெற்கு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மே 16, மே 17 ஆம் தேதிகளில், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மே 18, மே 19ஆம் தேதிகளில், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்: