தமிழ்நாடு

tamil nadu

அரிசி, தவிடு தயாரிப்பு பேக்கிங் பொருளுக்கு மாறுங்க - தமிழ்நாடு அரசு

By

Published : Dec 30, 2021, 3:38 PM IST

நெகிழி ஒழிப்பை சாத்தியமாக்க வியாபாரிகள் அனைவரும் அரிசி, தவிடு மூலம் தயாரிக்கப்படும் பேக்கிங் பொருள்களுக்கு மாற வேண்டும் எனச் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

சுப்ரியா சாஹூ ட்விட்
சுப்ரியா சாஹூ ட்விட்

சென்னை: தமிழ்நாட்டில் நெகிழி ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் நெகிழி ஒழிப்பினைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தற்போது சுற்றுச்சூழல் துறை சார்பாக அரிசி, தவிடு மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை பேக் செய்யும் பெட்டி, நீர் அருந்தும் டம்ளர் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இது குறித்து சுப்ரியா சாஹு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், “அரிசி, தவிடு மூலம் தயாரிக்கும் பொருள்களை வியாபாரிகள் பயன்படுத்த வேண்டும். இவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை அல்ல, எளிதில் அழிக்கக் கூடியது. உணவுப் பொருள்கள் தயாரிப்பவர்கள் உடனே சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களுக்கு மாற வேண்டிய தருணம் இது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அதர்வாவின் குருதி ஆட்டம் படத்திற்குத் தடை

ABOUT THE AUTHOR

...view details