தமிழ்நாடு

tamil nadu

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

By

Published : Jun 6, 2021, 12:39 PM IST

Updated : Jun 6, 2021, 3:28 PM IST

மு.க.ஸ்டாலின் ஆய்வு
மு.க.ஸ்டாலின் ஆய்வு

12:34 June 06

சென்னை வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுன்.6) ஆய்வு செய்தார்.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 9 வயது பெண் சிங்கம் கரோனா தொற்றால் இறந்தது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த பூங்கா அலுவலர்கள் மற்ற சிங்கங்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இரண்டு வயதான சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

மேலும் ஆறு சிங்கங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதால், தற்போது முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று(ஜூன்.6) மதியம் பூங்காவிற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பூங்கா அலுவலர்களுடன் அவர் ஆலோசனை செய்தார். 

பிறகு பூங்காவில் உள்ள பேட்டரி கார் மூலம் அவர் பூங்கா வளாகத்தை சுற்றி வன விலங்குகளைப் பார்வையிட்டார். இது குறித்து பூங்காவின் துணை இயக்குநர் நாக சதீஷ் கூறுகையில், "பூங்காவில் 2,500க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் வாழ்கின்றன. எல்லா உயிரினங்களிடமிருந்து மாதிரி எடுப்பது ஒரு கடினமான விஷயம். அதனால் சிங்கங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகளுக்கு மாதிரி எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்" என்றார். 

இதையும் படிங்க: கறுப்புப் பூஞ்சை: கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Last Updated : Jun 6, 2021, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details