தமிழ்நாடு

tamil nadu

Chettinad Group: செட்டிநாடு குழுமத்தில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!

By

Published : Apr 25, 2023, 10:18 AM IST

Updated : Apr 25, 2023, 1:40 PM IST

செட்டிநாடு குழுமத்தில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

Etv Bharat
Etv Bharat

சென்னை:சென்னையை தலைமையிடமாக கொண்ட செட்டிநாடு நிறுவனம் சிமெண்ட், கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ் என இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ஆந்திரா, கர்நாடக, மும்பை உள்ளிட்ட 60 இடங்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு 9-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் செட்டிநாடு குழுமம் 700 கோடி ரூபாய் வரை வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாபத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரிதுறையினர் உறுதி செய்தனர். மேலும் கணக்கில் வராத பணம் ரூபாய் 23 கோடியையும் பறிமுதல் செய்யப்பட்டது.

செட்டிநாடு குழுமம் வெளிநாட்டில் 110 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள வாங்கியதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை வைத்ததற்கான ஆவணங்களையும் வருமான வரிதுறையினர் கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் செட்டிநாடு குழுமத்தின் மீது கறுப்புப் பண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

லாபத்தை குறைத்து காட்டி, போலியான ஆவணங்கள் மூலம் மோசடி செய்தும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது பெறப்பட்ட நன்கொடை மற்றும் போலி ரசீதுகளை மறைத்து சுமார் 435 கோடி ரூபாயை கண்டுபிடித்தனர். மேலும், முறையாக கணக்கு காட்டாதா 280 கோடியளவில், செட்டிநாடு குழும நிறுவனங்களிடையே நடந்த போலி பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருந்தது காரணமாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை துவக்கியுள்ளனர். வெளிநாட்டில் சொத்து சேர்த்தது போலி பணப்பரிவர்த்தனைகள், கருப்பு பண நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக வருமான வரித்துறையில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது பல்வேறு சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் முதற்கட்டமாக செட்டிநாடு குழுமத்திற்கு தொடர்பான இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கிய நிலையில் இன்று(ஏப்ரல் 25) இரண்டாவது நாளாக சோதனையானது தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: போலி ஜாதி சான்றிதழ் விவகாரத்தில் நீதிபதிகள் சரமாரி கேள்வி!

Last Updated : Apr 25, 2023, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details