டாக்கா:ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசத்தின் டக்காவில் நடைபெற்று வருகிறது. ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தென் கொரியாவுடன் 2-2 என்று டிரா செய்தது. இதையடுத்து இந்தியா 2ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.