தமிழ்நாடு

tamil nadu

'சீனாவுக்கு எதிரான எந்தவொரு கூட்டணியிலும் சேர மாட்டோம்' - ரஷ்யா

By

Published : Jul 25, 2020, 8:10 AM IST

மாஸ்கோ: சீனாவுடன் நட்புறவு வைத்துள்ளோம் என்றும், அந்நாட்டுக்கு எதிரான எந்தவொரு கூட்டணியிலும் சேர மாட்டோம் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

china
china

கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் (ஜூலை 23) பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, "சீனாவை எதிர்கொள்ள ஒரு "புதிய கூட்டணியை" உருவாக்க அழைப்பு விடுத்திருந்தார். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவில் தனது நாட்டில் உள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அரசும் தங்கள்‌ நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசுகையில், "மாஸ்கோ - பெய்ஜிங் இடையே சிறப்பு உறவுகள் பகிரப்பட்டு வருகிறது. சீனாவுடன் நட்புறவாக இருப்பதால், அந்நாட்டுக்கு எதிரான எந்தவொரு கூட்டணியிலும் நாங்கள் சேரமாட்டோம். எங்கள் நாட்டின் அனைத்து நட்பு நாடுகளுடனும் பரஸ்பர நன்மைக்கான உறவுகளை வளர்ப்பதையே நோக்கமாக வைத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details