தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கைதிகளின் கைவண்ணத்தில் உருவான வண்ண விநாயகர் சிலைகள்!

புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் செய்த விநாயகர் சிலைகளின் விற்பனையை சிறைத் துறை ஐஜி தொடங்கிவைத்தார்.

sale-of-ganesha-idols-made-by-prisoners
கைதிகள் செய்த விநாயகர் சிலைகள் விற்பனை!

By

Published : Sep 10, 2021, 10:07 AM IST

புதுச்சேரி:புதுச்சேரி காலப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில், 75 தண்டனை கைதிகளும், 200-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறையில் இருக்கும் கைதிகள் விற்பனைக்காக விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ளனர்.

அவர்கள் தயாரித்த சிலைகள் உள்ளாட்சித் துறை வளாகத்தில் அமைந்துள்ள சிறைத் துறை ஐஜி ரவ்தீப் சிங் சாகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிலைகளைப் பார்வையிட்டு முதல் விற்பனையை ஐஜி தொடங்கிவைத்தார்.

பின்னர், அந்தச் சிலைகள் மாத்தூர் சாலையில் உள்ள சிறை வாயிலில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய சிறைத் துறை ஐஜி, சிறை மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் சிறையில் உள்ள கைதிகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர வாய்ப்பு அளிக்கப்பட்டுவருவதாகவும், இந்தச் செய்முறைத் திட்டங்களுக்கு இரண்டாம் வாய்ப்பு எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் மட்டும் கைதிகள் தற்கொலை முயற்சி செய்வதில்லை என்று குறிப்பிட்ட அவர், பிணைக் கிடைப்பதில் தாமதம், குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க முடியாமல் பிரிந்து இருப்பதன் மூலம் ஏற்படும் மன அழுத்தம்தான் கைதிகளைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது எனவும், இதனை எதிர்கொள்ள கைதிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறைத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மனநல ஆலோசனை வழங்கி சிறைக்குள் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:’சிறைச்சாலைகள் அறச்சாலைகளாக மாற கல்வியே கருவி’

ABOUT THE AUTHOR

...view details