தமிழ்நாடு

tamil nadu

அதானி விவகாரம் தொடர்பான விவாதத்தை தடுக்க மோடி அனைத்தையும் செய்வார் - ராகுல் காந்தி

By

Published : Feb 6, 2023, 5:44 PM IST

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் தொடர்பான விவாதத்தைத் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அனைத்தையும் செய்வார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லி:அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூட்டத்தொரில் தொடர் அமளியில் ஈடுபட்டுவருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தினர்.

இந்த அமளியின் காரணமாக மாநிலங்களவை 3ஆவது நாளாக முடங்கியது. இதனிடையே நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் தொடர்பான விவாதத்தைத் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லியில் இன்று (பிப்.6) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி இதை தெரிவித்தார். அதோடு அவர், அதானி விவகாரத்தை மோடி மறைக்க முக்கிய காரணம் இருக்கிறது. அது என்னவென்று மக்களுக்கு தெரியும். இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தி உண்மையை வெளிகொண்டு வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும். அதானியின் பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக, மத்திய அரசை பற்றியும், ஊழல் பற்றியும் நான் பேசிவருகிறேன். அதானி குறித்து விவாதம் யாரும் பேசுவதில்லை. இதுகுறித்து விவாதம் நடத்தவே மத்திய அரசு பயப்படுகிறது. ஆகவே, விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details