தமிழ்நாடு

tamil nadu

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்: ஆதரவளித்த கேரள பாஜக எம்.எல்.ஏ!

By

Published : Dec 31, 2020, 2:12 PM IST

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

O Rajagopal
O Rajagopal

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற கேரள சட்டபேரவை இன்று (டிச.31) கூடியது. முதலமைச்சர் பினராயி விஜயன் இந்தத் தீர்மானத்தை வாசித்து அவையில் முன்மொழிந்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு ஆளும் இடதுசாரி தலைமையிலான எல்.டி.எஃப், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக உறுப்பினரும் ஆதரவு தெரிவித்தது ஆச்சரியத்தை அளித்தது.

பாஜக சார்பில் தேர்வாகியுள்ள ஒரே சட்டபேரவை உறுப்பினரான ஓ.ராஜகோபல், வேளாண் சட்டத்திற்கு எதிரான இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக உறுப்பினர் ஒருவரே ஆதரவு தெரிவித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ராஜகோபால், ”சில இடங்களில் முரண் கருத்து இருந்தாலும், இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளேன். சட்டப்பேரவையின் பொதுக் கருத்துக்கு உடன்படுவதே ஜனநாயகப் பண்பு” என்றார்.

இதையும் படிங்க:புத்தாண்டு முதல் மீண்டும் இயக்கப்பட உள்ள ’வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’

ABOUT THE AUTHOR

...view details